மேரி லெரின் பெரேராவின் பூதவுடல் நாளை நல்லடக்கம்

மேரி லெரின் பெரேராவின் பூதவுடல் நாளை நல்லடக்கம்

மேரி லெரின் பெரேராவின் பூதவுடல் நாளை நல்லடக்கம்

எழுத்தாளர் Staff Writer

30 Oct, 2020 | 2:13 pm

Colombo (News 1st) மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேரி லெரின் பெரேராவின் பூதவுடல் நாளை (31) வென்னப்புவ புனித ஜோசப் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

மேரி லெரின் பெரேரா தனது 73 ஆவது வயதில் நேற்று காலமானார்.

அன்னார் முன்னாள் அமைச்சரான பெஸ்டஸ் பெரேராவின் மனைவியும், முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா மற்றும் நிஷானி பெரேரா ஆகியோரின் தாயாரும் ஆவார்.

மேரி லெரின் பெரேரா 2001 லிருந்து 2010 ஆம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார்.

1988 ஆம் ஆண்டு முதல் 13 வருடங்கள் வடமேல் மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.

அன்னாரின் பூதவுடல் வென்னப்புவயிலுள்ள அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், நாளை நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்