பாராளுமன்ற பேரவைக்கான உறுப்பினர்களை பெயரிடுமாறு பிரதமருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் சபாநாயகர் உத்தரவு

எழுத்தாளர் Staff Writer

30 Oct, 2020 | 8:17 pm

Colombo (News 1st) பாராளுமன்ற பேரவைக்கான உறுப்பினர்களை பெயரிடுமாறு பிரதமருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உத்தரவிட்டுள்ளார்.

20 ஆவது திருத்தம் நடைமுறைக்கு வந்ததை அடுத்து, அரசியலமைப்பு சபை இரத்தானதால், அதற்கு பதிலாக பாராளுமன்ற பேரவையே உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், சகல சுயாதீன ஆணைக்குழுக்களின் நியமனங்களுக்கான கண்காணிப்பினை மேற்கொள்ளும் நடவடிக்கை பாராளுமன்ற பேரவையினூடாக முன்னெடுக்கப்படும்.

எவ்வாறாயினும், அந்த கண்காணிப்பின் மூலம் விடுக்கப்படும் எதிர்ப்பு அல்லது ஆதரவை கவனத்திற்கொள்ளாமல் செயற்பட 20 ஆவது திருத்தத்தில் ஜனாதிபதிக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்