பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான சுகாதார வழிகாட்டுதல்களை வழங்குமாறு கல்வி அமைச்சு கோரிக்கை

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான சுகாதார வழிகாட்டுதல்களை வழங்குமாறு கல்வி அமைச்சு கோரிக்கை

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான சுகாதார வழிகாட்டுதல்களை வழங்குமாறு கல்வி அமைச்சு கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

30 Oct, 2020 | 1:49 pm

Colombo (News 1st) பாடசாலைகளை எதிர்வரும் 09 ஆம் திகதி மீண்டும் திறக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான சுகாதார வழிகாட்டுதல்களை எழுத்து மூலம் வழங்குமாறு சுகாதார அமைச்சிடம் கோரியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், இணையத்தளம் ஊடாக முன்னெடுக்கப்படும் கற்றல் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

சிறுவர்கள் அனைவருக்கும் இணையத்தள வசதியின்மையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் பாடசாலை கல்வியை பெறும் 4.5 மில்லியன் சிறுவர்கள் உள்ளனர்.

நாட்டில் 10,164 பாடசாலைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்