நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 9,791 ஆக அதிகரிப்பு

நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 9,791 ஆக அதிகரிப்பு

நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 9,791 ஆக அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Oct, 2020 | 1:57 pm

Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளான 586 பேர் நேற்று (29) அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் COVID-19 தொற்றுடன் அடையாளங்காணப்பட்டோரின் எண்ணிக்கை 6,313 ஆக அதிகரித்துள்ளது.

இதனடிப்படையில், நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 9,791 ஆக பதிவாகியுள்ளது.

தொற்றுக்குள்ளானோரில் 5,660 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை 4,142 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்