கொரோனாவிலிருந்து மேலும் 140 பேர் குணமடைந்தனர்

கொரோனாவிலிருந்து மேலும் 140 பேர் குணமடைந்தனர்

கொரோனாவிலிருந்து மேலும் 140 பேர் குணமடைந்தனர்

எழுத்தாளர் Staff Writer

30 Oct, 2020 | 8:41 pm

Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 140 பேர் குணமடைந்துள்ளனர்.

இதன் அடிப்படையில், நாட்டில் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4282 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே நேற்று (29) தொற்றுக்குள்ளான மேலும் 582 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

மினுவாங்கொடை, பேியகொடை கொத்தணியில் தொற்றுக்குள்ளானவர்களின்
மொத்த எண்ணிக்கை 6313 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 9791 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான 5490 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளாகி 19 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்