உயர்தர கணக்கியல் பாட பரீட்சையில் கணிப்பான்களை பயன்படுத்த அனுமதி

உயர்தர கணக்கியல் பாட பரீட்சையில் கணிப்பான்களை பயன்படுத்த அனுமதி

உயர்தர கணக்கியல் பாட பரீட்சையில் கணிப்பான்களை பயன்படுத்த அனுமதி

எழுத்தாளர் Staff Writer

30 Oct, 2020 | 2:59 pm

Colombo (News 1st) கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் நாளை (31) இடம்பெறவுள்ள கணக்கியல் பாட பரீட்சையில் கணிப்பான்களை (Calculators) பயன்படுத்த முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஏதேனும் சிக்கல்கள் காணப்படுமாயின் அது தொடர்பில் தமது திணைக்களத்துடன் தொடர்புகொள்ள முடியுமென பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பீ.பூஜித தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலிலுள்ள மேல் மாகாணம் மற்றும் ஏனைய பொலிஸ் பிரிவுகளில் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்காக போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனைத்து பரீட்சார்த்திகளும் உரிய நேரத்திற்கு பரீட்சை மத்திய நிலையங்களை சென்றடைவதை உறுதிப்படுத்துவது பெற்றோரின் கடமையென பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பீ.பூஜித கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்