4 முதல் 6 ஆம் திகதி வரை பாராளுமன்ற சபை நடவடிக்கையை இடைநிறுத்த தீர்மானம்

4 முதல் 6 ஆம் திகதி வரை பாராளுமன்ற சபை நடவடிக்கையை இடைநிறுத்த தீர்மானம்

4 முதல் 6 ஆம் திகதி வரை பாராளுமன்ற சபை நடவடிக்கையை இடைநிறுத்த தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

29 Oct, 2020 | 3:43 pm

Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக எதிர்வரும் 03 ஆம் திகதி மாத்திரம் பாராளுமன்றத்தைக் கூட்ட கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 04, 05, 06 ஆம் திகதிகளில் சபை நடவடிக்கையை இடைநிறுத்த கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

பாராளுமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று இடம்பெற்றது.

பாராளுமன்றத்தின் அடுத்தகட்ட செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இன்று முற்பகல் 11.30 அளவில் கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் ஆரம்பமாகியது.

பாராளுமன்ற பொலிஸ் பிரிவை சேர்ந்த ஒருவர் COVID-19 தொற்றுக்குள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டமையால் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்