28 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் COVID-19 தொற்றுக்குள்ளானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

28 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் COVID-19 தொற்றுக்குள்ளானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

எழுத்தாளர் Staff Writer

29 Oct, 2020 | 8:42 pm

Colombo (News 1st) நாடளாவிய ரீதியிலுள்ள 350 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் 28 பிரிவுகளில் COVID-19 தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இன்று இடம்பெற்ற COVID ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணியின் கலந்துரையாடலில் வௌிக்கொண்டு வரப்பட்டது.

COVID ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணி ஜனாதிபதியின் தலைமையில் கூடியது.

COVID-19 பரவலைத் தடுக்கும் நோக்கில் 41 ஆயிரம் பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இன்றைய கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, COVID-19 தொடர்பிலான பிந்திய மற்றும் அத்தியாவசியமான விடயங்களை அறிந்துகொள்வதற்கான செயலியும் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

குறித்த செயலி நோய்த்தொற்று, குணமடைதல், தனிமைப்படுத்தல், PCR பரிசோதனை உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கியது என மேல் மாகாண சுகாதாரப் பிரிவினர் ஜனாதிபதிக்கு தௌிவுபடுத்தினர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்