பிரான்ஸ் தேவாலயத்தில் கத்திக்குத்து தாக்குதல்

பிரான்ஸ் தேவாலயத்தில் கத்திக்குத்து தாக்குதல்: மூவர் உயிரிழப்பு

by Bella Dalima 29-10-2020 | 6:29 PM
Colombo (News 1st) பிரான்ஸின் நீஸ் நகரிலுள்ள தேவாலயமொன்றில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் பெண் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். இதுவொரு பயங்கரவாதத் தாக்குதலென நீஸ் நகர மேயர் Christian Estrosi தெரிவித்துள்ளார். வழிபாட்டிற்காக தேவாலயத்திற்கு சென்ற வயதான நபரொருரின் தலை பகுதியளவில் துண்டிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் நபர் பொலிஸாரினால் சுட்டுப் பிடிக்கப்பட்டுள்ளார். இம்மாத ஆரம்பத்தில் Samuel Paty எனும் ஆசிரியரும் அவரது பாடசாலைக்கருகில் வைத்து தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். குறித்த ஆசிரியரின் கொலையையும் தேவாலயத்தில் இன்று இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலையும் நீஸ் நகர மேயர் தொடர்புபடுத்தியுள்ளார். இதனிடையே, பிரான்ஸின் Montfavet நகரில் இன்று காலை பிறிதொரு தாக்குதல் பதிவாகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கைத்துப்பாக்கியைக் காட்டி பொலிஸாரை அச்சுறுத்திய நபரொருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.