by Bella Dalima 29-10-2020 | 3:34 PM
Colombo (News 1st) தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் தெற்கு அதிவேக வீதியில் வாகனப் போக்குவரத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் கடவத்தை, கொட்டாவையிலிருந்து வெலிப்பன்னை வௌியேறும் பகுதி வரையிலேயே பயணிக்க முடியும்.
ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறையிலிருந்து தெற்கு அதிவேக வீதியூடாக கொழும்பிற்குள் பிரவேசிக்க வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த மட்டுப்படுத்தல் நடவடிக்கை பொருந்தாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.