தலவாக்கலை நகர சபை தலைவராக லட்சுமன் பாரதிதாசன் பொறுப்பேற்பு

by Staff Writer 29-10-2020 | 5:02 PM
Colombo (News 1st) தலவாக்கலை நகர சபையின் தலைவராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் லட்சுமன் பாரதிதாசன் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். தலவாக்கலை நகர சபை தலைவராக செயற்பட்ட அசோக சேபாலவை பதவி நீக்குவதாக நேற்று வர்த்தமானி அறிவித்தல் வௌியாகியிருந்தது. இந்த நிலையில், நகர சபையின் புதிய தலைவராக லட்சுமன் பாரதிதாசன் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். நிகழ்வில் தோட்ட உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.