களுத்துறையில் தனிமைப்படுத்தப்பட்ட சில கிராமங்கள் விடுவிப்பு

களுத்துறையில் தனிமைப்படுத்தப்பட்ட சில கிராமங்கள் விடுவிப்பு

களுத்துறையில் தனிமைப்படுத்தப்பட்ட சில கிராமங்கள் விடுவிப்பு

எழுத்தாளர் Staff Writer

29 Oct, 2020 | 1:27 pm

Colombo (News 1st) களுத்துறை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட சில கிராமங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.

மத்துகம பிரதேச செயலக பிரிவில் உள்ள பதுகம மற்றும் புதிய குடியேற்றத்திட்டம் தவிர்ந்த ஏனைய பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உடன் அமுலாகும் வகையில் குறித்த கிராமங்கள் தனிமைப்படுத்தல் வலையத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளை ஆரம்பமாகவுள்ள வார இறுதி விடுமுறையின் போது அனைவரும் தங்களின் வீடுகளிலே வசிக்க வேண்டும் என அகில இலங்கை மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தேவையற்ற பயணங்கள், சுற்றுலாக்களினூடாக வைரஸ் தொற்றுக்கு உள்ளாக நேரிடலாம் என இலங்கை மருத்துவ சங்கத்தின் உபதலைவர் பேராசிரியர் மனுஜ் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்