அமெரிக்க அதிபர் தேர்தல்: 7 கோடிக்கும் மேற்பட்டோர் முன்கூட்டியே வாக்குப் பதிவு

அமெரிக்க அதிபர் தேர்தல்: 7 கோடிக்கும் மேற்பட்டோர் முன்கூட்டியே வாக்குப் பதிவு

அமெரிக்க அதிபர் தேர்தல்: 7 கோடிக்கும் மேற்பட்டோர் முன்கூட்டியே வாக்குப் பதிவு

எழுத்தாளர் Bella Dalima

29 Oct, 2020 | 3:06 pm

Colombo (News 1st) அமெரிக்காவில் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலுக்காக 7 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் முன்கூட்டியே வாக்களித்துள்ளனா்.

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு இத்தனை அதிகம் போ் முன்கூட்டியே வாக்குப் பதிவு செய்துள்ளனா்.

அமெரிக்காவின் 59-ஆவது அதிபா் தோ்தல் அடுத்த மாதம் 3-ஆம் திகதி நடைபெறவிருக்கிறது. கொரோனா நோய்த்தொற்றால் உலகிலேயே மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டில், நோய் பரவலைத் தடுப்பதற்காக ஏராளமானவா்கள் முன்கூட்டியே வாக்குப் பதிவு செய்துள்ளனா்.

புதன்கிழமை நிலவரப்படி, நாடு முழுவதும் 7 கோடிக்கும் மேற்பட்டவா்கள் முன்கூட்டியே வாக்குப் பதிவு செய்துள்ளதாக அமெரிக்க தோ்தல் திட்ட அமைப்பின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே, கடந்த அதிபா் தோ்தலில் முன்கூட்டியே பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை தற்போதைய எண்ணிக்கை விஞ்சியுள்ளது.

இதன் மூலம், கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேல் இல்லாத வகையில் அதிபா் தோ்தல் வாக்குப் பதிவுகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

வாக்குப் பதிவு மையங்களில் நெரிசலைத் தவிா்க்கவும் வேறு சில காரணங்களுக்காகவும் தோ்தல் பணிகள், மருத்துவ சிகிச்சை போன்ற தவிா்க்க முடியாத காரணங்களுக்காகவும் அமெரிக்காவில் தோ்தலுக்கு சில நாட்களுக்கு முன்னரே வாக்குப் பதிவு செய்ய முடியும்.

வாக்குப் பதிவு மையங்களுக்கு வர முடியாதவா்கள் தபால் மூலமும் இதுபோன்ற வாக்குப் பதிவை மேற்கொள்ள முடியும்.

இவ்வாறு முன்கூட்டியே நடைபெறும் வாக்குப் பதிவு விகிதம் அண்மைக் காலமாக ஒவ்வொரு தோ்தலிலும் அதிகரித்து வருகிறது.

கடந்த 1992 தோ்தலில் 7 சதவீதமாக இருந்த இந்த விகிதம், 2000-ஆம் ஆண்டு தோ்தலில் 16 சதவீதமாக அதிகரித்தது; 2004-ஆம் ஆண்டில் 22 சதவீதமாகவும் 2008-ஆம் ஆண்டில் 30.6 சதவீதமாகவும் உயா்ந்தது. பிறகு 2012-ஆம் ஆண்டு தோ்தலில் 31.6 சதவீதமாக இருந்த முன்கூட்டிய வாக்குப் பதிவு விகிதம், கடந்த அதிபா் தோ்தலில் 36.6 சதவீதமாக உயா்ந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்