மாலைத்தீவு புறப்பட்டுச் சென்றார் மைக் பொம்பியோ

மாலைத்தீவு புறப்பட்டுச் சென்றார் மைக் பொம்பியோ

மாலைத்தீவு புறப்பட்டுச் சென்றார் மைக் பொம்பியோ

எழுத்தாளர் Staff Writer

28 Oct, 2020 | 6:07 pm

Colombo (News 1st) அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்

இன்று பகல் 1 மணியளவில் அவர் நாட்டிலிருந்து மாலைத்தீவு நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

நாட்டிற்கு வருகை தந்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ, இன்று பகல் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு சென்று வழிபட்ட பின்னர் மாலைத்தீவு நோக்கி பயணித்துள்ளார்.

மாலைத்தீவிற்கான விஜயத்தின் பின்னர் அமெரிக்க இராஜாங்க செயலாளர் உள்ளிட்ட குழுவினர் இந்தோனேசியாவிற்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்