உலகளவில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 4.42 கோடியாக உயர்வு

உலகளவில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 4.42 கோடியாக உயர்வு

உலகளவில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 4.42 கோடியாக உயர்வு

எழுத்தாளர் Bella Dalima

28 Oct, 2020 | 2:28 pm

Colombo (News 1st) உலகளவில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 4.42 கோடியாக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் 3 கோடி பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

இன்று காலை நிலவரப்படி, உலகளவில் 4,42,52,677 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 3,24,47,505 கோடி பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 1,17,1,479 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதும் தற்போது 10,63,3,693 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 80,024 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 9,03,8,030 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,32,084 பேர் பலியாகியுள்ளனர்.

தொடர்ந்து கொரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் இந்தியாவும், மூன்றாம் இடத்தில் பிரேசிலும் நான்காம் இடத்தில் ரஷ்யாவும் உள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்