64 பொலிஸ் பிரிவுகளில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்

64 பொலிஸ் பிரிவுகளில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்

64 பொலிஸ் பிரிவுகளில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்

எழுத்தாளர் Staff Writer

27 Oct, 2020 | 11:17 am

Colombo (News 1st) நாட்டின் 64 பொலிஸ் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலிலுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் 15 பொலிஸ் பிரிவுகளிலும் கம்பஹா மாவட்டத்தின் 37 பொலிஸ் பிரிவுகளிலும் குளியாப்பிட்டியவில் 5 பொலிஸ் பிரிவுகளிலும் களுத்துறை மாவட்டத்தின் 3 பொலிஸ் பிரிவுகளிலும் வெல்லம்பிட்டி, கொத்தட்டுவ, முல்லேரியா மற்றும் வெலிக்கடை பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, புறக்கோட்டை மற்றும் கோட்டை பகுதிகளில் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாததால் பஸ் மற்றும் ரயில்களில் பயணிக்கும் நோக்கில் அப்பகுதிகளுக்குள் பிரவேசிப்பதை தவிர்க்குமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்