வௌிநாட்டவர்களினது விசா காலம் டிசம்பர் 05 ஆம் திகதி வரை நீடிப்பு

வௌிநாட்டவர்களினது விசா காலம் டிசம்பர் 05 ஆம் திகதி வரை நீடிப்பு

வௌிநாட்டவர்களினது விசா காலம் டிசம்பர் 05 ஆம் திகதி வரை நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

27 Oct, 2020 | 3:42 pm

Colombo (News 1st) இலங்கையில் தங்கியுள்ள அனைத்து வௌிநாட்டவர்களினதும் விசா காலம் டிசம்பர் 05 ஆம் திகதி வரை 60 நாட்களினால் நீடிக்கப்பட்டுள்ளது.

விசாக் கட்டணம் மற்றும் விசாவை பெறுவதற்கான காலம் பின்னர் அறிவிக்கப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாவினைப் பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசா பிரிவுக்கு சமூகமளிப்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

எந்தவொரு வௌிநாட்டவரும் டிசம்பர் 05 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டை விட்டு வௌியேறினால், விமான நிலையத்தில் விசாவுக்கான கட்டணத்தை தண்டப்பணமின்றி செலுத்த வேண்டும் எனவும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்