by Staff Writer 27-10-2020 | 11:10 AM
Colombo (News 1st) பாராளுமன்றம் இன்றும் மூடப்பட்டுள்ளது.
தொற்று நீக்கம் செய்வதால் பாராளுமன்றத்தை நேற்றும் இன்றும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இந்த நாட்களில் பாராளுமன்றத்திற்கு சமூகமளிக்க வேண்டாம் என பாராளுமன்ற நிர்வாக ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.
நாளை (28) முதல் பாராளுமன்றத்தின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ள பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம், திணைக்களத்தின் தலைமை அதிகாரி அறிவிக்கும் பட்சத்தில் மாத்திரமே அன்றைய தினம் சேவைக்கு சமூகமளிக்க வேண்டும் என பாராளுமன்ற ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.