கொரோனாவினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு

கொரோனாவினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு

கொரோனாவினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

27 Oct, 2020 | 9:47 pm

Colombo (News 1st) நாட்டில் கொரோனாவினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.

நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த கொழும்பைச் சேர்ந்த 19 வயதான ஆண் ஒருவரும் 87 வயதான பெண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.

இன்று இதுவரை 293 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நோயாளர்களுடன் தொடர்பில் இருந்த 291 பேரும் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த இருவரும் இதில் உள்ளடங்குகின்றனர்.

மேல் மாகாணத்தில் 17 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படை உறுப்பினர்களும் இதில் அடங்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் 180 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்