by Staff Writer 27-10-2020 | 11:41 AM
Colombo (News 1st) ஆசிய வலயத்தில் நான்கு நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இன்று இரவு இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது இலங்கையின் தலைவர்களையும் வௌிவிவகார அமைச்சரையும் அவர் சந்தித்து உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை மேற்கொள்வார் என வெிளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இரு நாடுகளுக்குமிடையிலான பல துறை விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆட்சிக்காலத்தில் நாட்டிற்கு வருகை தரும் அமெரிக்க உயர்மட்ட அதிகாரி, மைக் பொம்பியோ என வௌிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் வொஷிங்டனில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமெரிக்காவின் தென் மற்றும் மத்திய ஆசிய விடயங்களுக்கு பொறுப்பான துணை இராஜாங்க செயலாளர் டீன் தொம்ஸன் இந்த விஜயம் தொடர்பில் சில முக்கிய விடங்களை குறிப்பிட்டிருந்தார்.
இந்த விஜயத்தின் போது அமெரிக்க இராஜாங்க செயலாளர் இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து கலந்துரையாடுவார் எனவும் வௌிவிவகார அமைச்சரையும் அவர் சந்திப்பார் எனவும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
நேற்றைய தினம் தனது பயணத்தை ஆரம்பித்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் இந்தியாவை சென்றடைந்துள்ளார்.
இலங்கைக்கு வருகை தரும் அவர் பின்னர் மாலைத்தீவு நோக்கி புறப்படவுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் இந்தோனேஷியாவிற்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.