மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் ரோயல்ஸ்

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் ரோயல்ஸ்

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் ரோயல்ஸ்

எழுத்தாளர் Staff Writer

26 Oct, 2020 | 2:32 pm

Colombo (News 1st) IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் நேற்று (25) நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

IPL தொடரின் நேற்றைய 45 ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் விளையாடின.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

அணி சார்பில் ஹர்திக் பாண்டியா ஆட்டமிழக்காமல் 60 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன், சூர்யகுமார் யாதவ் 40 ஓட்டங்களை குவித்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கட் இழப்பிற்கு 195 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 18.2 ஓவர்களில் வெற்றியிலக்கை கடந்தது.

பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்காமல் 107 ஓட்டங்களை குவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்