நாடளாவிய ரீதியிலான வேலைநிறுத்த போராட்டத்திற்கு பெலாரஸ் எதிர்க்கட்சி அழைப்பு

நாடளாவிய ரீதியிலான வேலைநிறுத்த போராட்டத்திற்கு பெலாரஸ் எதிர்க்கட்சி அழைப்பு

நாடளாவிய ரீதியிலான வேலைநிறுத்த போராட்டத்திற்கு பெலாரஸ் எதிர்க்கட்சி அழைப்பு

எழுத்தாளர் Staff Writer

26 Oct, 2020 | 3:13 pm

Colombo (News 1st) நாடளாவிய ரீதியிலான வேலைநிறுத்த போராட்டத்திற்கு பெலாரஸ் எதிர்க்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

அந்நாட்டு ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரால் தாக்குல் மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து, இன்று வேலைநிறுத்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்வெட்லனா டிக்கனொவ்ஸ்கயா அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லூக்கஷென்கோவை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுமென அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்த போதிலும், பாரிய பேரணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்