திருகோணமலையில் கத்திக்குத்துக்கு இலக்காகி பெண் ஒருவர் பலி

திருகோணமலையில் கத்திக்குத்துக்கு இலக்காகி பெண் ஒருவர் பலி

திருகோணமலையில் கத்திக்குத்துக்கு இலக்காகி பெண் ஒருவர் பலி

எழுத்தாளர் Staff Writer

26 Oct, 2020 | 6:25 pm

Colombo (News 1st) திருகோணமலை – ஹொரவப்பொத்தானையில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றிற்குள் வைத்து பெண்ணொருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று (26) மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக
ஹொரவபொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.

தனது கணவருடன் நிதி நிறுவனத்திற்கு சென்றிருந்த பெண்ணை ஒருவர் கத்தியால் குத்தியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

3 பிள்ளைகளின் தாயான ஹொரவபொத்தானையை சேர்ந்த 34 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.​

சந்தேக நபர் கெப்பத்திகொல்லாவ நீதவான் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்