தனிமைப்படுத்தல் தொடர்பிலான இராணுவத் தளபதியின் புதிய அறிவித்தல்

தனிமைப்படுத்தல் தொடர்பிலான இராணுவத் தளபதியின் புதிய அறிவித்தல்

எழுத்தாளர் Staff Writer

26 Oct, 2020 | 5:51 pm

Colombo (News 1st) கொரோனா நோயாளர்களுடன் நெருங்கு பழகியவர்களை இன்று (26) முதல் வீட்டில் தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக COVID – 19 ஒழிப்பு தேசிய செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 130 பேர் இன்று பூரண குணமடைந்துள்ளனர்.

அதன் பிரகாரம் நாட்டில் குணமடைந்த நோயாளர்களின் எண்ணிக்கை 3,933 ஆக உயர்வடைந்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 7,875 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

தொற்றுக்குள்ளான 4,057 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்