by Staff Writer 25-10-2020 | 3:41 PM
Colombo (News 1st) துருக்கிக்கான தமது நாட்டு உயர்ஸ்தானிகரை பிரான்ஸ் மீள அழைத்துள்ளது.
துருக்கி ஜனாதிபதி ரிசெப் தயிப் எர்டோகன், பிரெஞ்ச் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோனை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மெக்ரோனின் சர்ச்சைக்குரிய கருத்தை தொடர்ந்து அவருக்கு உளவியல் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என துருக்கி ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
பிரான்ஸ் ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து மெக்ரோன் வௌியிட்ட கருத்தினால் சர்ச்சை உருவாகியுள்ளது.