மீன் தொடர்பில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாமென அறிவுறுத்தல் 

மீன் தொடர்பில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாமென அறிவுறுத்தல் 

மீன் தொடர்பில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாமென அறிவுறுத்தல் 

எழுத்தாளர் Staff Writer

25 Oct, 2020 | 2:50 pm

Colombo (News 1st) சமைத்த மீனை உண்பதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதாக, சமூகத்தில் பரவியுள்ள வதந்திகளை நம்ப வேண்டாம் என சுகாதார அமைச்சு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

அவ்வாறான தகவலை விஞ்ஞானபூர்வமாக உறுதிப்படுத்துவதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை சுகாதார அமைச்சு அறிக்கையூடாக தெரிவித்துள்ளது.

எனினும், மீனை சமைக்கும் போதும் களஞ்சியப்படுத்தும் போதும் முகத்தை தொடுவதை தவிர்க்குமாறு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ், மீனின் எப்பாகத்திலும் இருக்கலாம் என்ற காரணத்தினால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் பயன்படுத்திய பாத்திரங்கள் மற்றும் கைகளை நன்றாக கழுவ வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

எவ்வித காரணமுமின்றி மீன் விற்பனை நிலையத்தை மூடுவதை தவிர்க்குமாறும் சுகாதார அமைச்சு தனது அறிக்கையூடாக குறிப்பிட்டுள்ளது.

சமூக இடைவௌியை பேணுதல், கைகளை கழுவுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளுடன் வர்த்தக நிலையங்களை நடாத்திச் செல்ல முடியும் எனவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்