கம்பஹாவில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுல்

கம்பஹாவில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுல்

கம்பஹாவில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுல்

எழுத்தாளர் Staff Writer

25 Oct, 2020 | 2:29 pm

Colombo (News 1st) கம்பஹா மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என COVID – 19 ஒழிப்பு தேசிய செயலணி அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், கம்பஹா மாவட்டத்தில் நாளை (26) வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்தியவசிய பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்களை நாளை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை திறப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக COVID – 19 ஒழிப்பு தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்திலுள்ள மக்கள், தமக்கு அருகிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்களுக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்து கொள்ள முடியும் என கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு அமைய, வீடுகளிலிருந்து ஒருவர் மாத்திரம் வர்த்தக நிலையங்களுக்கு செல்வது உசிதமானது எனவும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்