11 பேருக்கு கொரோனா: வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகம் மூடப்பட்டது

11 பேருக்கு கொரோனா: வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகம் மூடப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

24 Oct, 2020 | 5:35 pm

Colombo (News 1st) மட்டக்களப்பு – வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்துடன் தொடர்புடைய 11 பேருக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து துறைமுகம் மூடப்பட்டுள்ளது.

பேலியகொடை மீன் சந்தைக்கு கிழக்கு மாகாணத்திலிருந்தும் வழமையாக மீன் கொண்டு செல்லப்படுவதால், மீனவர்களுக்கு எழுமாறாக PCR பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது, பதினொரு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

இதனையடுத்து, வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகம் மூடப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்திலும் 6 பேருக்கு COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் சந்தித்த பலர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மீனவர்களுக்கு தொற்று உறுதியானதை அடுத்து, வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் விசேட கலந்துரையாடலொன்று இன்று காலை நடைபெற்றது.

சுகாதார அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்