கொத்தட்டுவ, முல்லேரியா ஆகிய பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல்

by Staff Writer 24-10-2020 | 4:38 PM
Colombo (News 1st) கொத்தட்டுவ, முல்லேரியா ஆகிய பகுதிகளில் இன்றிரவு 7 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. மறு அறிவித்தல் வரை இந்த பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என COVID-19 ஒழிப்பு தேசிய செயலணி தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் 51 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். கொழும்பு தெமட்டகொட, மருதானை பொலிஸ் பிரிவுகளில் நேற்றிரவு முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில், மறுஅறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. களுத்துறை மாவட்டம், பேருவளை, அளுத்கம, பயாகல ஆகிய பொலிஸ் பிரிவுகளில் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தின் 10 பொலிஸ் பிரிவுகளிலும், கம்பஹா மாவட்டத்திலும், குருநாகலில் 5 பொலிஸ் பிரிவுகளிலும், களுத்துறையின் 3 பொலிஸ் பிரிவுகளிலும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ளது.