பொடி லெசிக்கு சொந்தமான துப்பாக்கிகள் 2 கைப்பற்றல்

பொடி லெசிக்கு சொந்தமான துப்பாக்கிகள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளன

by Staff Writer 24-10-2020 | 4:11 PM
Colombo (News 1st) குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொடி லெசிக்கு சொந்தமான T-56 ரக துப்பாக்கி ஒன்றும் கைத்துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சந்தேகநபரால் வழங்கப்பட்ட வாக்குமூலத்திற்கு அமைய, மீட்டியாகொட பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது துப்பாக்கிகள் மீட்கப்படடுள்ளன. இந்த தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகநபரான பொடி லெசியும் அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.