நாட்டில் 15 ஆவது கொரோனா மரணம் பதிவு

நாட்டில் 15 ஆவது கொரோனா மரணம் பதிவு

எழுத்தாளர் Staff Writer

24 Oct, 2020 | 3:24 pm

Colombo (News 1st) நாட்டில் 15 ஆவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 56 வயதான ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர், விசேட வைத்திய நிபுணர் ஜயருவன் பண்டார குறிப்பிட்டார்.

குளியாப்பிட்டிய – கீதலவ பகுதியை சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார்.

மூன்றாவது தடவையாக அவருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR சோதனையின் போதே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

IDH வைத்தியசாலையில் நேற்று முன்தினம் உயிரிழந்த 50 வயதான பெண்ணுடன், குருநாகல் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பெற்று வந்த ஒருவரே இன்று உயிரிழந்துள்ளார்.

கடந்த 14 ஆம் திகதி இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருதய நோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், நோய் அதிகரித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்