by Staff Writer 24-10-2020 | 4:19 PM
Colombo (News 1st) கண்டி ஶ்ரீ தலதா மாளிகைக்கு செல்வோர் கட்டாயமாக தங்களின் தேசிய அடையாள அட்டையை எடுத்துச்செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்போர், அவர்களுடன் தொடர்புடைய நபர்கள் தலதா மாளிக்கைக்குள் பிரவேசிப்பது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தியவடன நிலமே பிரதீப் நிலங்கதெல தெரிவித்துள்ளார்.
மீண்டும் கொரோனா தொற்று ஏற்படுவதை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஶ்ரீ தலதா மாளிகை வளாகத்திற்குள் பிரவேசிக்கும் அனைவரும் முகக்கவசம் அணிந்து வருதலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கைகளைக் கழுவி, உடல் வெப்பநிலை அவதானிக்கப்பட்டதன் பின்னரே அனைவரும் ஶ்ரீ தலதா மாளிகைக்குள் அனுமதிக்கப்படுவர் எனவும் தியவடன நிலமே அறிவித்துள்ளார்.