by Staff Writer 23-10-2020 | 8:11 PM
Colombo (News 1st) 1987 ஆம் ஆண்டு LTTE-யினால் தேரர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பாதிக்கப்பட்டவர் தரப்பில் வாக்குமூலம் பதிவு செய்து, குற்ற விசாரணையை ஆரம்பிக்குமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா, பதில் பொலிஸ் மா அதிபர்C.D.விக்ரமரத்னவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பில் குற்ற விசாரணை முன்னெடுக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்குமாறும் சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.