609 பேருக்கு கொரோனா: 496 பேர் பேலியகொடை மீன் சந்தையில் அடையாளம் காணப்பட்டவர்கள்

609 பேருக்கு கொரோனா: 496 பேர் பேலியகொடை மீன் சந்தையில் அடையாளம் காணப்பட்டவர்கள்

609 பேருக்கு கொரோனா: 496 பேர் பேலியகொடை மீன் சந்தையில் அடையாளம் காணப்பட்டவர்கள்

எழுத்தாளர் Bella Dalima

23 Oct, 2020 | 6:45 pm

Colombo (News 1st) இன்று 609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 496 பேர் பேலியகொடை மீன் சந்தையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஏனையவர்களில் 48 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்தும், 5 பேர் காலி மீன்பிடி துறைமுகத்திலும் 20 பேர் பேருவளை மீன்பிடி துறைமுகத்திலும் 40 பேர் தொடர்புடையோர் பட்டியலிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 6,896 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 3,238 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர்.

COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 83 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

அதற்கமைய, நாட்டில் இதுவரை 3,644 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்