44 பொலிஸ் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்

44 பொலிஸ் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்

44 பொலிஸ் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்

எழுத்தாளர் Bella Dalima

23 Oct, 2020 | 4:01 pm

Colombo (News 1st) நாட்டின் 44 பொலிஸ் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என பொலிஸார் தெரிவித்தனர்.

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்கள், வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளைப் பின்பற்றி செயற்படுதல் அவசியம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் தங்களின் அலுவலக அடையாள அட்டைகளை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியும் என அவர் கூறினார்.

எனினும், அலுவலக வேலை நேரம் தவிர்ந்த ஏனைய சந்தர்ப்பங்களில் அவற்றை பயன்படுத்த முடியாது எனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார்.

கம்பஹா மாவட்டத்திலுள்ள 33 பொலிஸ் பிரிவுகளிலும் கொழும்பு வடக்கு பிராந்தியத்தில் 5 பொலிஸ் பிரிவுகளிலும் வெல்லம்பிட்டிய மற்றும் குளியாப்பிட்டியவில் 5 பொலிஸ் பிரிவுகளில் இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட கடந்த 4 ஆம் திகதி முதல், இதுவரையான காலப்பகுதி வரை 693 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

இந்த காலப்பகுதியில் 92 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த 24 மணித்தியாலங்களில் 88 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

நேற்றைய தினம் மாத்திரம் 17 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளூடாக வாகனங்கள் பயணிக்க முடியும் என்ற போதிலும், வாகனங்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்க முடியாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்