by Staff Writer 23-10-2020 | 9:51 PM
Colombo (News 1st) கொழும்பு மாவட்டத்தின் மருதானை மற்றும் தெமட்டகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், களுத்துறை மாவட்டத்தின் பயாகல, பேருவளை மற்றும் அளுத்கம பொலிஸ் பிரிவுகளிலும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை காலை 5 மணி வரை இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.