by Staff Writer 23-10-2020 | 8:21 PM
Colombo (News 1st) பாராளுமன்றத்தில் இன்று மீண்டும் வாக்கெடுப்பொன்று இடம்பெற்றது.
அரச கணக்குகள் குழுவின் தலைவர் பதவி எதிர்க்கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு கிடைக்க வேண்டும் என ஏற்பட்ட விவாதத்தின் பின்னரே வாக்கெடுப்பு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
நிலையியல் கட்டளையின் படி அந்தப் பதவி எதிர்க்கட்சிக்கு கிடைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியது.
எனினும், குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தின் பிரகாரம் தலைவர் தெரிவு செய்யப்பட வேண்டும் என ஆளுங்கட்சி தெரிவித்தது.
அதன்படி, நிலையியல் கட்டளையில் எது குறிப்பிடப்பட்டிருந்தாலும், அரச கணக்குகள் குழுவின் தலைவர், அதன் உறுப்பினர்களினால் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற யோசனையை ஆளுங்கட்சி முன்வைத்தது.