பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் 20 மீனவர்களுக்கு கொரோனா தொற்று

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் 20 மீனவர்களுக்கு கொரோனா தொற்று

எழுத்தாளர் Bella Dalima

23 Oct, 2020 | 3:25 pm

Colombo (News 1st) பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் 20 மீனவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

மீன்பிடி துறைமுகத்திலுள்ள ஏனைய மீனவர்களுக்கு இன்று PCR சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த மீனவர்களுடன் தொடர்புடைய ஏனையவர்களிடம் மாதிரிகள் பெறப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

பேருவளை மீன்பிடி துறைமுகம் இன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பேருவளை மீன்பிடி துறைமுகத்திலுள்ள மீனவர்கள் சிலருக்கு PCR சோதனை மேற்கொள்ளவுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டார்.

இதேவேளை, காலி துறைமுகத்திலும் சில மீனவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் காலி துறைமுகத்தில் இதுவரை 165 PCR சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து காலி துறைமுகத்தின் 90 வீதமான நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக துறைமுகத்தின் முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த கொரோனா நோயாளர் ஒருவர் கொஸ்கம வைத்தியசாலையிலிருந்து தப்பிச்சென்றுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்