சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான காலாவதி திகதி நீடிப்பு

சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான காலாவதி திகதி நீடிப்பு

சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான காலாவதி திகதி நீடிப்பு

எழுத்தாளர் Bella Dalima

23 Oct, 2020 | 4:22 pm

Colombo (News 1st) 2020 டிசம்பர் 31 ஆம் திகதியுடன் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான காலாவதி திகதி மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் வாகன வருமான அனுமதிப் பத்திர விநியோகம் நேற்று (22) முதல் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதிக்குள் காலாவதியாகும் வருமான அனுமதிப் பத்திரத்தை மீளப் பெற்றுக்கொள்ளும் போது நவம்பர் 15 ஆம் திகதி வரை அபராதம் அறவிடப்பட மாட்டாது என மேல் மாகாண பிரதம செயலகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கன்சியூலர் திணைக்களத்தினூடாக முன்னெடுக்கப்படும் அனைத்து சேவைகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்