கொஸ்கம வைத்தியசாலையிலிருந்து தப்பிச்சென்றவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்

கொஸ்கம வைத்தியசாலையிலிருந்து தப்பிச்சென்றவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்

எழுத்தாளர் Bella Dalima

23 Oct, 2020 | 3:53 pm

Colombo (News 1st) கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கக் கூடும் என்ற சந்தேகத்தில் கொஸ்கம – சாலாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச்சென்ற நோயாளர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

பொரளை சஹஸ்புர தொடர்மாடிக் குடியிருப்பில் தங்கியிருந்த போது அவர் கண்டுபிடிக்கப்பட்டதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

இந்த தொடர்மாடி குடியிருப்பிற்கு பொலிஸாரும் சுகாதார தரப்பினரும் தற்போது சென்றுள்ளதாக அவர் கூறினார்.

கண்டுபிடிக்கப்பட்ட நபரை மீண்டும் சிகிச்சைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிகிச்சைகள் நிறைவு பெற்றதன் பின்னர் , தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் இந்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

சாலாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கிரேண்ட்பாஸ் பகுதியை சேர்ந்த நபர் இன்று அதிகாலை தப்பிச் சென்றிருந்தார்.​


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்