பரீட்சார்த்திகளுக்கு விசேட போக்குவரத்து வசதி

கம்பஹா மாவட்ட பரீட்சார்த்திகளுக்கு விசேட போக்குவரத்து வசதி 

by Staff Writer 22-10-2020 | 7:11 AM
Colombo (News 1st) தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள கம்பஹா மாவட்டத்திலிருந்து உயர் தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மற்றும் பரீட்சை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட தரப்பினருக்காக போக்குவரத்து வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேநேரம், ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்காகவும் போக்குவரத்து வசதி வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார். குளியாப்பிட்டிய கல்வி வலயம் மற்றும் கம்பஹா மாவட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஏனைய பகுதிகளில் இன்று (22) ஆரம்பமாகும் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.