ஈரான் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

அச்சுறுத்தலான மின்னஞ்சல்களுக்கு ஈரான் பொறுப்பு - அமெரிக்கா குற்றச்சாட்டு

by Staff Writer 22-10-2020 | 11:50 AM
Colombo (News 1st) அமெரிக்க வாக்காளர்களுக்கு அச்சுறுத்தல் மின்னஞ்சல்கள் அனுப்பப்படுவதற்கு ஈரானே பொறுப்பு என அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீவிர ட்ரம்ப் சார்பு குழு ஒன்றின் மூலம் அமைதியின்மையை தூண்டும் வகையில் குறித்த மின்னஞ்சல்கள் அனுப்பப்பட வாய்ப்புள்ளதாக தேசிய புலனாய்வுப்பிரிவின் இயக்குநர் தெரிவித்துள்ளார். அத்துடன் சில வாக்காளர்களின் தரவுகளை ரஷ்யா மற்றும் ஈரான் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தேசிய புலனாய்வு பிரிவின் இயக்குநர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 3 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் குறித்த அறிவிப்பு வௌியாகியுள்ளது.