மினுவாங்கொடை கொத்தணியில் 186 பேர் பூரண குணம் 

மினுவாங்கொடை கொத்தணியில் 186 பேர் பூரண குணம் 

எழுத்தாளர் Staff Writer

22 Oct, 2020 | 1:25 pm

Colombo (News 1st) மினுவாங்கொடை கொத்தணியில் COVID – 19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட 186 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேநேரம், களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை பிரதேச செயலாளர் பிரிவுக்கு கீழ் காணப்படும் பாலிந்தநுவர பிரதேச செயலாளர் பிரிவுகளில் 06 கிராமங்களை தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மத்துகம பகுதியில் பஸ்​ஸொன்றில் சேவையாற்றும் சாரதி மற்றும் நடத்துநர் ஆகியோருக்கு COVID – 19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதற்கு அமைய அவர்களுடன் தொடர்புகளை பேணிய 26 பேருக்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி இதன்போது குறிப்பிட்டார்.

மேலும் குறித்த நபர்களை தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதன் காரணமாக கொழும்பு, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதன்போது விளக்கமளித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்