பட்டதாரிகளின் பயிற்சி வேலைத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்

பட்டதாரிகளின் பயிற்சி வேலைத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்

பட்டதாரிகளின் பயிற்சி வேலைத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

22 Oct, 2020 | 9:01 am

Colombo (News 1st) அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ள பட்டதாரிகளுக்கான பயிற்சி வேலைத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அரச ​சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை அரச சேவைகளுக்கான பயிற்சிகளில் 50000 பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இவர்களை பிரதேச செயலகங்களுக்கு அழைக்கும் போது, சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு அரச ​சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இவர்களுக்கான 20,000 ரூபா மாதாந்த கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்