கொழும்பு துறைமுகத்தில் கடமையாற்றும் சுங்க பரிசோதகர்கள் இருவருக்கு கொரோனா தொற்று

கொழும்பு துறைமுகத்தில் கடமையாற்றும் சுங்க பரிசோதகர்கள் இருவருக்கு கொரோனா தொற்று

எழுத்தாளர் Staff Writer

22 Oct, 2020 | 8:36 pm

Colombo (News 1st) அனுப்பப்பட்டிருந்த மரக்கறி வகைகளை விற்பனை செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நிறைவடைந்ததும் இன்று முற்பகல் 10 மணிக்கு மெனிங் பொதுச்சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது.

எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு மெனிங் சந்தையை மீளத் திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, குணசிங்கபுரவில் 400 பேருக்கான PCR பரிசோதனை இன்று மேற்கொள்ளப்பட்டது.

கொழும்பு துறைமுகத்தில் கடமையாற்றும் சுங்க பரிசோதகர்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இவர்கள் கொழும்பு துறைமுகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகே கடமையாற்றிவர்களாவர்.

துறைமுக சுங்கத்தின் ஆறு பிரதான நுழைவாயில்களில் நான்கு நுழைவாயில்கள் இதனால் மூடப்பட்டுள்ளதாக மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்