20 ஆவது திருத்தம் குறித்த பாராளுமன்ற விவாதம் இன்று

20 ஆவது திருத்தம் தொடர்பான பாராளுமன்ற விவாதம் இன்று ஆரம்பம்

by Staff Writer 21-10-2020 | 7:03 AM
Colombo (News 1st) 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலான பாராளுமன்ற விவாதம் இன்று (21) ஆரம்பமாகின்றது. இதேவேளை, இந்த விவாதம் நாளைய தினமும் (22) இடம்பெறவுள்ளது. 20 ஆவது அரசியலமைப்பு தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகரால் நேற்று (20) பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திலுள்ள 4 சரத்துகளை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாக சர்வசன வாக்கெடுப்பு அவசியம் என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதில் இரண்டு சரத்துகள், குழுநிலை சந்தர்ப்பத்தில் மேற்கொள்வதாக கூறப்பட்டுள்ள திருத்தங்களுக்கு அமைய நிறைவேற்றப்படுமானால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மாத்திரம் போதுமானது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மற்றுமொரு சரத்தில் உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ள திருத்தம் மேற்கொள்ளப்பட்டால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அந்த சரத்தையும் நிறைவேற்ற முடியும் என பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்