கம்பஹாவில் மேலும் 2 இலட்சம் குடும்பங்களுக்கு 5000

கம்பஹாவில் மேலும் 2 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரண நிதி 

by Staff Writer 21-10-2020 | 8:59 AM
Colombo (News 1st) தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள கம்பஹாவில் பாதிக்கப்பட்டுள்ள மேலும் 2 இலட்சம் குடும்பங்களுக்கு 5,000 ரூபா நிவாரணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக 1,050 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப் வித்தான தெரிவித்துள்ளார். இதேவேளை, கம்பஹாவில் பாதிக்கப்பட்டுள்ள 72000 குடும்பங்களுக்கு 5,000 ரூபா நிதியுதவி வழங்கும் நடவடிக்கைகள் நேற்று (20) ஆரம்பிக்கப்பட்டன. அரசாங்கத்தினால் நேற்று 400 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதாகவும் அதில் 139 மில்லியன் ரூபா மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கம்பஹா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் தெரிவித்தார். அத்துடன், மீதமுள்ள பணத்தை இன்று (21) மக்களுக்கு வழங்குமாறு கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அரச பணியில் இல்லாத அனைத்து குடும்பங்களும் இந்த 5,000 ரூபா நிதி உதவியை பெற்றுக் கொள்ள முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப் வித்தான தெரிவித்தார்.