ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்களுக்கு மத்திய அரசு விருது

ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்களுக்கு மத்திய அரசு விருது

ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்களுக்கு மத்திய அரசு விருது

எழுத்தாளர் Bella Dalima

21 Oct, 2020 | 3:52 pm

பார்த்திபன் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படத்திற்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஹவுஸ் ஓனர் திரைப்படத்திற்கும் மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மொழி சார்ந்த படங்களுக்கு மத்திய அரசு விருது வழங்கி வருகிறது. அதன்படி, 2019 ஆம் ஆண்டிற்கான விருதுப் பட்டியலில் தமிழ் திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

அதில் இயக்குநரும் நடிகருமான பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்திற்கு மத்திய அரசின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பார்த்திபன் கடந்த ஆண்டு ஒத்த செருப்பு என்ற படத்தை இயக்கி இருந்தார். அதில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே ஒட்டுமொத்த திரைப்படத்திலும் தோன்றும் வகையிலான திரைக்கதை அமைத்து இருந்தார். இந்திய சினிமாவில் இது புதிய முயற்சி என்று பலரும் பாராட்டினர். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது மத்திய அரசின் விருதுக்கு ‘ஒத்த செருப்பு’ தெரிவாகியுள்ளது.

இதேபோல், லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஹவுஸ் ஓனர் என்ற தமிழ் திரைப்படத்திற்கு விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திரைப்படமும் அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்