22 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகின்றது சக்தி TV 

22 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகின்றது சக்தி TV 

எழுத்தாளர் Staff Writer

20 Oct, 2020 | 7:17 am

Colombo (News 1st) மக்கள் மனங்களில் நீங்கா இடம்பிடித்து தமிழ் பேசும் மக்களின் சக்தியாக திகழும் சக்தி TV இன்று (20) தனது 22 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகின்றது.

சாதனைப் பயணத்தில் 22 அகவையை பூர்த்தி செய்யும் சக்தி TV , 1998 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கை தமிழ் தொலைக்காட்சிகளின் முன்னோடியாய் புதுமைகளின் தாயகமாய் சக்தி TV  விளங்கி வருகின்றது.

இலங்கை தொலைக்காட்சி துறைக்கு பாரிய பங்களிப்பினை வழங்கும் சக்தி TV , முன்னணி தமிழ் ஊடகம் மாத்திரமின்றி இலங்கையின் முதல் நிலை ஊடகமாகவும் செயற்பட்டு வருகின்றது.

கலை, கலாசாரம், அரசியல், பண்பாடு என அனைத்து துறைகளிலும் மக்களுக்கு தரமான நிகழ்ச்சிகளை வழங்கிய பெருமை சக்தி TV க்கு உண்டு.

தமிழ் பேசும் மக்களின் சக்தியாக தொடர்ந்தும் பல சாதனைகளை படைக்க சக்தி TV க்கு நியூஸ்பெஸ்ட்டின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்