முடக்கப்பட்டிருந்த புங்குடுதீவு மீண்டும் திறப்பு

by Staff Writer 20-10-2020 | 7:15 PM
Colombo (News 1st) கடந்த 14 நாட்களாக முடக்கப்பட்டிருந்த புங்குடுதீவு இன்று மீண்டும் திறக்கப்பட்டது. மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டமையைத் தொடர்ந்து குறித்த பகுதி முடக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது புங்குடுதீவுக்கான போக்குவரத்தும் வழமைக்குத் திரும்பியுள்ளது. அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் எவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்படாததையடுத்து, முடக்க நிலை தளர்த்தப்பட்டதாக யாழ்ப்பாண அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். இதேவேளை, கடந்த 14 நாட்களாக முடக்கி வைக்கப்பட்டிருந்த கம்பளை - புபுரஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மணிக்கட்டி நியூஃபொரஸ்ட் தோட்டம் இன்று மீளத்திறக்கப்பட்டது. தொற்றுக்குள்ளானவர் ஒருவர் இனங்காணப்பட்டதையடுத்து, 14 நாட்கள் இந்த தோட்டம் முடக்கி வைக்கப்பட்டிருந்தது.